< Back
கிரிக்கெட்
டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி...கோலி, ரோகித் முன்னேற்றம்..!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி...கோலி, ரோகித் முன்னேற்றம்..!

தினத்தந்தி
|
10 Jan 2024 11:31 AM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

துபாய்,

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. மேலும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஆஸ்திரேலியா அணி முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதேபோல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் பும்ரா 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சாக்னே, டேரில் மிட்செல், விராட் கோலி, ஹாரி புரூக், பாபர் ஆசம், உஸ்மான் கவாஜா, ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இடத்திலும், பேட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2 முதல் 5 இடங்களிலும் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

மேலும் செய்திகள்