< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 357 ரன்கள் குவிப்பு

Image : @ProteasMenCSA

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 357 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
9 Aug 2024 9:50 PM IST

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் (7-ம் தேதி) தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் ஆன டோனி டி ஜோர்ஜி 78 ரன்களும், கேப்டன் பவுமா 86 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 113 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வியான் முல்டர் 37 ரன்களுடனும், ரபடா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளும், கெமர் ரோச் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 357 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. 3வது நாள் உணவு நாள் இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 53 ரன்கள் எடுத்துள்ளது

மேலும் செய்திகள்