< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு...!
|16 July 2023 9:41 AM IST
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
காலே,
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு களம் இறங்குகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.