< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 202 ரன்கள் முன்னிலை

image courtesy: twitter/@ICC

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 202 ரன்கள் முன்னிலை

தினத்தந்தி
|
20 Sep 2024 1:28 PM GMT

இலங்கை அணியின் 2-வது இன்னிங்சில் கருணாரத்னே, சண்டிமால் அரைசதம் அடித்தனர்.

காலே,

இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 91.5 ஓவர்களில் 305 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம் ஒரூர்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 90.5 ஓவர்களில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டாம் லதாம் 70 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூரிய 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 35 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் நிசங்கா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன்பின் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கருணாரத்னே - சண்டிமால் இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அணி வலுவான முன்னிலையை நோக்கி பயணிக்க வைத்தனர்.

கருணாரத்னே 83 ரன்களிலும், சண்டிமால் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இலங்கை 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மேத்யூஸ் மற்றும் டி சில்வா தலா 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்