< Back
கிரிக்கெட்
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி...!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி...!

தினத்தந்தி
|
3 Jun 2023 9:35 PM IST

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில்அயர்லாந்து கிரிக்கெட் அணி விளையாடியது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி இங்கிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 172 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி பென் டக்கட் சதத்துடனும், போர் இரட்டை சதத்தின் உதவியுடன் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 352 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி 86.2 ஓவரில் 362 ரன்கள் குவித்து 10 ரன்கள் முன்னிலை பெற்றது.இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4 பந்தில் 3 பவுண்டரிகளை அடித்து 12 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றி அசத்தியது.

மேலும் செய்திகள்