இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்; வங்காளதேச அணி வீரர்கள் இன்று சென்னை வருகை
|நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச அணி வீரர்கள் இன்று சென்னை வருகிறார்கள்
சென்னை,
வங்காளதேச கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் கடந்த 12-ந் தேதி சென்னை வந்தடைந்தனர். இதையடுத்து அவர்கள் கடந்த 2 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று மாலை 3 மணியளவில் விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். வங்காளதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், லிட்டான் தாஸ், தஸ்கின் அகமது உள்பட 16 பேர் இடம் பிடித்துள்ளனர். வங்காளதேச அணியினர் தங்களது பயிற்சியை நாளை தொடங்குகின்றனர்.