< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்களில் ஆல் அவுட்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்களில் ஆல் அவுட்

தினத்தந்தி
|
27 Jan 2024 10:37 AM IST

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஐதராபாத்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஜடேஜா 87 ரன் எடுத்த நிலையில் ரூட் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய பும்ரா டக் அவுட் ஆனார். இதையடுத்து முகமது சிராஜ் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 121 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 87 ரன், ராகுல் 86 ரன், ஜெய்ஸ்வால் 80 ரன் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து 190 ரன்கள் பின்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை ஆட உள்ளது.

மேலும் செய்திகள்