ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; வைரலாகும் வெஸ்ட் இண்டீஸ் வீரரின் வெற்றிக் கொண்டாட்டம் வீடியோ
|ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது .நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து 311 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் ஆஸ்திரேலியா முதலில் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கவாஜா சிறப்பாக விளையாடி 75 ரன்கள் சேர்த்து 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவர் அலேக்ஸ் கேரியுடன் இணைந்து 6-வது விக்கெட்கட்கு 96 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
கவாஜா சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர் பந்தில் ஆட்டமிழந்தார். சின்க்ளேர் பந்தை தூக்கி அடிக்க முயற்சித்த போது ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
நீண்ட நேரம் களத்தில் நின்ற கவாஜாவின் விக்கெட்டை அறிமுக போட்டியில் வீழ்த்தியதும் உற்சாகத்துடன் சின்க்ளேர் ஜிம்னாஸ்டிக் வீரர்களை போன்று டைவ் அடித்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.