< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; 2 அறிமுக வீரர்கள்...பிளேயிங் லெவனை அறிவித்த பாகிஸ்தான்..!

Image Grab on Video posted by @TheRealPCB

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; 2 அறிமுக வீரர்கள்...பிளேயிங் லெவனை அறிவித்த பாகிஸ்தான்..!

தினத்தந்தி
|
13 Dec 2023 1:20 PM IST

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

பெர்த்,

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனால் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் காண உள்ளது. பாபர் ஆசம் ஒரு வீரராக அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. அந்த அணியில் அமீர் ஜமால் மற்றும் குர்ரம் ஷாஜாத் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் பிளேயிங் லெவன் விவரம்:

இமாம் உல் ஹக், அப்துல்லா ஷாபீக், ஷான் மசூத் (கேப்டன்), பாபர் ஆசம், சவூத் சகீல், சர்ப்ராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆஹா, பஹீம் அஷ்ரப், ஷாகின் அப்ரிடி, அமீர் ஜமால், குர்ரம் ஷாஜாத்

மேலும் செய்திகள்