< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மிதாலி ராஜுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து
|9 Jun 2022 4:18 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மிதாலி ராஜுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
23 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மிளிரச் செய்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான மிதாலி ராஜ் சர்வதேச போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் நம் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டிய அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா கால கட்டத்தில் தெலுங்கானா ராஜ்பவனுடன் இணைந்து புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவளித்து தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன். இவ்வாறு அதில் அவர்கூறியுள்ளார்.