< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்திய அணியின் மிடில் வரிசை தடுமாற்றம்: யுவராஜ்சிங் கவலை
|9 Aug 2023 5:07 AM IST
காயமடைந்த வீரர்கள் (ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல்) குணமடையாவிட்டால் மாற்று வீரர்களை தயார்படுத்த வேண்டும்' என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
மொஹாலி,
இந்திய முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், 'ஒரு இந்தியராக நமது அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ஆசை. ஆனால் காயம் காரணமாக இந்திய அணியின் மிடில் வரிசை கவலைக்குரியதாக இருப்பதை பார்க்கிறேன். இந்த பிரச்சினையை சரி செய்யாவிட்டால் நெருக்கடி மிகுந்தஆட்டங்களில் நாம் தடுமாற வேண்டியது தான்.
தொடக்க வீரர்கள் சீக்கிரம் ஆட்டமிழக்கும் போது மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டியது அவசியம். இது கடினமான ஒரு பணி. இதற்கு அனுபவம் ரொம்ப முக்கியம். காயமடைந்த வீரர்கள் (ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல்) குணமடையாவிட்டால் மாற்று வீரர்களை தயார்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.