கிரிக்கெட்
ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணி அறிவிப்பு

Image Courtesy: @TNCACricket

கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
1 Oct 2024 8:49 PM IST

ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணி சாய் கிஷோர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடப்பு சீசனுக்கான (2024-25) ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் தமிழக அணி குரூப் டி-யில் இடம் பெற்றுள்ளது.

இந்த பிரிவில் சத்தீஸ்கர், டெல்லி, சவுராஷ்டிரா, அசாம், ஜார்கண்ட், சண்டிகர், ரெயில்வே அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழக அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சாய் கிஷோர் கேப்டனாகவும், என். ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக அணி விவரம்;

சாய் கிஷோர் (கேப்டன்), என்.ஜெகதீசன் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், சாய் சுதர்சன், விஜய் சங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால், ஷாரூக் கான், பூபதி வைஷ்ண குமார், முகமது அலி, அண்ட்ரே சித்தார்த், அஜித் ராம், சுரேஷ் லோகேஷ்வர், லக்ஷய் ஜெய்ன், சந்தீப் வாரியர், குர்ஜப்நீத் சிங், எம். முகமது, சோனு யாதவ், எம்.சித்தார்த்.


மேலும் செய்திகள்