< Back
கிரிக்கெட்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்: சுப்மன் கில் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி

image courtesy; ICC

கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்: சுப்மன் கில் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி

தினத்தந்தி
|
24 Jun 2024 6:46 PM IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் வரும் 29ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தொடர் முடிந்ததும் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி விவரம்:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.


மேலும் செய்திகள்