< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர்: மார்கஸ் ஸ்டோனிஸ் விலகல்
|18 Feb 2024 8:16 AM IST
ஆல்-ரவுண்டர் ஆரோன் ஹார்டி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி வருகிற 21-ந் தேதி வெலிங்டனிலும், 2-வது மற்றும் 3-வது டி20 போட்டி முறையே 23, 25-ந் தேதிகளில் ஆக்லாந்திலும் நடக்கிறது.
இந்த நிலையில் , நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து இருந்த ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் முதுகுவலி காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஆரோன் ஹார்டி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.