< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: நியூயார்க் புறப்பட்ட விராட் கோலி..பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா?

image courtesy: AFP

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: நியூயார்க் புறப்பட்ட விராட் கோலி..பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா?

தினத்தந்தி
|
31 May 2024 3:50 AM GMT

டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி நியூயார்க் புறப்பட்டுள்ளார்.

மும்பை,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜூன் 5-ந் தேதி அயர்லாந்தை நியூயார்க்கில் சந்திக்கிறது. முன்னதாக நியூயார்க்கில் வருகிற 1-ந் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே நியூயார்க் சென்று அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி செல்லவில்லை.

இந்நிலையில் விராட் கோலி நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக நியூயார்க் புறப்பட்டு சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவர் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் மற்றும் அவர்களுடன் செல்பி எடுத்தார். இன்று அவர் இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்