< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு
|9 Jun 2024 6:01 AM IST
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகள் மோதுகின்றன.
கயானா,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கயானாவில் இன்று நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி உகாண்டாவை எதிர்கொள்கிறது.
இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.