< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: விளம்பர தூதராக பிரபல தடகள வீரர் நியமனம்
|25 April 2024 8:33 AM IST
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
துபாய்,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான விளம்பர தூதராக மின்னல்வேக ஓட்டப்பந்தய வீரரும், ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கம் வென்றவருமான உசேன் போல்ட் (ஜமைக்கா) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உலகக்கோப்பையை பிரபலப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.