< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக் கோப்பை : கனடா அணிக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு
|2 Jun 2024 6:36 AM IST
டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
டல்லாஸ்,
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா கனடா அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கனடா முதலில் பேட்டிங் செய்து வருகிறது .