< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரக வீரர் 109 மீட்டர் தூரம் சிக்ஸ் அடித்து அசத்தல்..!
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரக வீரர் 109 மீட்டர் தூரம் சிக்ஸ் அடித்து அசத்தல்..!

தினத்தந்தி
|
19 Oct 2022 5:14 AM IST

ஐக்கிய அரபு அமீரக அணி வீரர் ஜுனைத் சித்திக் 17-வது ஓவரில் 109 மீட்டர் தூரத்துக்கு இமாலய சிக்சர் ஒன்றை அடித்தார்.

சிட்னி,

8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 73 ரன்களில் சுருண்ட் பரிதாபமாக தோற்றது.

இதில் ஐக்கிய அரபு அமீரக அணி வீரர் ஜுனைத் சித்திக் 17-வது ஓவரில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். அது 109 மீட்டர் தூரம் சென்றது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்