< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; இலங்கை - நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்
|28 May 2024 8:08 AM IST
இன்று நடைபெறும் மற்ற பயிற்சி ஆட்டங்களில் வங்காளதேசம்-அமெரிக்கா, ஆஸ்திரேலியா-நமீபியா அணிகள் மோத உள்ளன.
புளோரிடா,
20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் இலங்கை - நெதர்லாந்து, வங்காளதேசம் - அமெரிக்கா, ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோத உள்ளன.
இன்றைய பயிற்சி ஆட்டங்கள் விவரம்:
இலங்கை - நெதர்லாந்து (மே-28, இரவு 8 மணி - இந்திய நேரம்) - புளோரிடா.
வங்காளதேசம் - அமெரிக்கா (மே-28, இரவு 9 மணி, இந்திய நேரம்) - டல்லாஸ்.
ஆஸ்திரேலியா - நமீபியா (மே-29, அதிகாலை 4.30 மணி, இந்திய நேரம்) - டிரினிடாட்.