< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி தவற விட்டது இது தான் - மேத்யூ ஹைடன்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி தவற விட்டது இது தான் - மேத்யூ ஹைடன்

தினத்தந்தி
|
11 Nov 2022 4:10 PM GMT

டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இதை தவறவிட்டது தான் அணிக்கு கடினமாகி விட்டது என மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.


8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி படுதோல்வியை சந்தித்து உள்ளது.

இந்நிலையில், இந்த காரணம் தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,

இந்திய அணியின் மிக முக்கிய காரணம் லெக்-ஸ்பின்னர் ஆடும் லெவனில் இல்லாதது மேலும், 6வது பந்து வீச்சாளர் இல்லாததும் தான் காரணம். பாகிஸ்தான் அணியில் 6வது பந்து வீச்சாளர் மட்டுமில்லாமல் 7வது பந்து வீச்சாளரும் உள்ளனர் (இப்திகார் அகமது ஆப் ஸ்பின் வீசுவார்) அதனால் டி20 போட்டிக்கு தேவையான எல்லா அம்சங்களும் பாகிஸ்தான் அணியில் நன்றாக உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்