டி20 உலகக்கோப்பை: பைனலில் மோதப்போகும் அணிகள் இவைதான் - கங்குலி கணிப்பு
|டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு பல முன்னாள் வீரர்கள் அணித்தேர்வு குறித்தும், வீரர்கள் பற்றியும், அணிகள் குறித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மோத உள்ள அணிகள் குறித்து தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது கணிப்பின் படி,2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை போன்று இந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளே இறுதிப்போட்டியில் மோதும் என்று தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.