< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை; அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் இவைதான் - பிரையன் லாரா கணிப்பு

கோப்புப்படம்

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை; அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் இவைதான் - பிரையன் லாரா கணிப்பு

தினத்தந்தி
|
29 May 2024 8:40 AM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து லாரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரான பிரையன் லாரா எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, போட்டி தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் இந்தியாவுடன் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மற்றொரு ஆசிய அணியான ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என கூறியுள்ளார். இவரது கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்