< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
|3 Jun 2024 7:42 PM IST
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
நியூயார்க்,
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் நியூயார்க்கில் மோத உள்ளன.
இந்த தொடருக்கான இலங்கை அணிக்கு வனிந்து ஹசரங்காவும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்ரமும் கேப்டனாக செயல்பட உள்ளனர். இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.