டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்துக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
|20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.
கிரோஸ் ஐலெட்,
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 38-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் களமிறங்கியது.
அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசங்கா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 17 ரன்களும் தனஞ்செயா டி சில்வா 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா சிறப்பாக விளையாடி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 30 ரன்களுடனும் வனிந்து ஹசரங்கா 20 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.