< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடர்: காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் பிரிடோரியஸ் விலகல்

Image Courtesy: Proteas Men

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடர்: காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் பிரிடோரியஸ் விலகல்

தினத்தந்தி
|
7 Oct 2022 12:48 PM IST

எலும்பு முறிவு காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பிரிடோரியஸ் விலகி உள்ளார்.


8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்நிலையில் டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்திருந்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் எலும்பு முறிவு காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது இடது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதனால் அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இருந்தும் விலகுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்தத் தொடரில் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அந்த போட்டியில் அவர் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். கடந்த டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்