டி20 உலகக்கோப்பை தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு
|டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன்,
9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த அணிக்கு வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-
வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலன், டிரெண்ட் போல்ட், மிட்செல் பிரெஸ்வேல், மார்க் சாப்மேன், கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நிஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி.
ரிசர்வ் வீரர்: பென் சீயர்ஸ்.
மேலும் இந்த தொடருக்காக புதிய ஜெர்சியையும் நியூசிலாந்து வாரியம் வெளியிட்டுள்ளது.