கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: எந்தெந்த அணிகளுக்கு எப்போது ஆட்டங்கள்..? முழு விவரம்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை அரையிறுதி: எந்தெந்த அணிகளுக்கு எப்போது ஆட்டங்கள்..? முழு விவரம்

தினத்தந்தி
|
25 Jun 2024 6:57 AM GMT

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைந்தன.

கயானா,

கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றன. லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் மட்டும் நடைபெற்றன.

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின. இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்த குரூப் 1 பிரிவிலிருந்து புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

மறுபுறம் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றிருந்த குரூப் 2 பிரிவிலிருந்து புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அதன்படி அரையிறுதியில் குரூப் 1 பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா, குரூப் 2-ல் 2-வது இடம் பிடித்த இங்கிலாந்துடன் மோத உள்ளது. மறுபுறம் குரூப் 2 பிரிவில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா, குரூப் 1 பிரிவில் 2-வது இடம் பிடித்த ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது.

அட்டவணை முழு விவரம் பின்வருமாறு:-

முதலாவது அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் - 27-ம் தேதி காலை 6 மணி ( இந்திய நேரப்படி) - பிரையன் லாரா மைதானம், டிரினிடாட்.

2-வது அரையிறுதி: இந்தியா - இங்கிலாந்து - 27-ம் தேதி இரவு 8 மணி (இந்திய நேரப்படி) - கயானா மைதானம்.

மேலும் செய்திகள்