< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 161 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து

Image Courtesy: ICC Twitter 

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 161 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து

தினத்தந்தி
|
17 Oct 2022 6:54 AM GMT

ஸ்கட்லாந்ட்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் அடித்தது.

ஹோபர்ட்,

16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக ஜார்ஜ் முன்சே, மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு அருமையான தொடக்கம் தந்த இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 55 ரன்னாக உயர்ந்த போது ஜோன்ஸ் 20 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் மேத்யூ கிராஸ் 4 ரன்னும், ரிச்சி பெர்ரிங்டன் 16 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். ஒரு புறம் விக்கெட்டுகள் இழந்த வண்ணம் இருந்த ஆனால் மறுமுனையில் விளையாடிய முன்சே அரைசதம் அடித்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது.

அந்த அணியில் அதிகப்டசமாக முன்சே 66 ரன்களும், கிறிஸ் 16 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடி வருகிறது.

மேலும் செய்திகள்