< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை; ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை; ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
1 May 2024 12:36 AM IST

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது.

காபூல்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை இன்றைக்குள் (மே 1ம் தேதி) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் முன்னணி வீரர்களான முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான அணி விவரம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக்கி, பரீட் அகமது மாலிக்.

ரிசர்வ் வீரர்கள்; செடிக் அடல், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஜாய், சலீம் சபி.


மேலும் செய்திகள்