< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்...பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்...பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி

தினத்தந்தி
|
17 Oct 2022 11:39 PM IST

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில், பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.

பிரிஸ்பேன்,

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில், பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் மழை காரணமாக 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய இங்கிலாந்து அணி, 14.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்