< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்த நெதர்லாந்து

image courtesy; @KNCBcricket

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்த நெதர்லாந்து

தினத்தந்தி
|
29 May 2024 7:17 AM GMT

நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

புளோரிடா,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி நெதர்லாந்தை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் லெவிட் 55 ரன் எடுத்தார்.

இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷன்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி நெதர்லாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் இலங்கை அணி 18.5 ஓவர்களில் 161 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக வனிந்து ஹசரங்கா 43 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்