< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
|1 Jun 2024 7:48 PM IST
வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
நியூயார்க்,
20 அணிகள் கலந்துகொள்ளும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (இந்திய நேரப்படி ஜூன் 2) ஆரம்பமாக உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக இன்று மோத உள்ளது.
இதையடுத்து இந்த பயிற்சி ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. பயிற்சி ஆட்டத்தில் அனைத்து வீரர்களையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.