டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: மேற்கு ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வி
|இந்தியா - மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது.
பெர்த்,
8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன
டி20 உலக கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது இந்திய அணி. உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களிலும் அக்டோபர் 17 அன்று ஆஸ்திரேலியா, அக்டோபர் 19 அன்று நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக காபா மைதானத்திலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
இதில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இந்த நிலையில் இந்தியா - மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் ,ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டும்,அர்ஷிதீப் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்
பின்னர் 169 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.அதிகபட்சமாக இந்திய அணியில் கே.எல்.ராகுல் 55 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.