< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை; பாகிஸ்தான் அல்ல..இந்த 4 அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் - அஸ்வின் கணிப்பு

கோப்புப்படம்

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை; பாகிஸ்தான் அல்ல..இந்த 4 அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் - அஸ்வின் கணிப்பு

தினத்தந்தி
|
9 Jun 2024 6:54 AM IST

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டிருந்தது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை என்பது குறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கணிப்பை கூறியுள்ளார். அஸ்வின் தன்னுடைய கணிப்பில் ஒரு அணியாக தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டிஸ் அணியை தேர்ந்தெடுத்திருக்கிறார். அடுத்ததாக இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்