< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் இல்லை... அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் இவைதான் - ராயுடு
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் இல்லை... அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் இவைதான் - ராயுடு

தினத்தந்தி
|
29 May 2024 8:14 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து அம்பத்தி ராயுடு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மும்பை,

20 அணிகள் பங்கேற்கும் 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. வருகிற 1-ந்தேதி தொடங்கும் இந்த போட்டிக்காக எல்லா அணிகளும் முழுவீச்சில் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன.

இந்த தொடர் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு, இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவரது கணிப்பின் படி, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுக்கு முன்னேறும் என்று கணித்துள்ளார்.

மேலும் செய்திகள்