< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: இந்தியா இல்லை..இந்த 4 அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் - மைக்கேல் வாகன் கணிப்பு

image courtesy:AFP 

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: இந்தியா இல்லை..இந்த 4 அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் - மைக்கேல் வாகன் கணிப்பு

தினத்தந்தி
|
1 May 2024 4:32 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்து மைக்கேல் வாகன், தனது கணிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளன. தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு பல முன்னாள் வீரர்கள் அணித்தேர்வு குறித்தும், வீரர்கள் பற்றியும், அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ள அணிகள் குறித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இங்கிலாந்து முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேற உள்ள 4 அணிகள் குறித்து தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.

அவரது கணிப்பின் படி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளே அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்