< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

image courtesy:@ICC

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
13 Jun 2024 5:51 AM IST

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.

டிரினிடாட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இந்த தொடரில் இன்று நடைபெறும் (காலை 6 மணிக்கு) 26வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைந்துவிடும் என்ற நிலையில் நியூசிலாந்து அணியும் ஆட உள்ளன.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்