< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை; உகாண்டாவை  வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து

Image Courtesy: AFP

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை; உகாண்டாவை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து

தினத்தந்தி
|
15 Jun 2024 4:40 AM GMT

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

டிரினிடாட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் டிரினிடாட்டில் இன்று நடைபெற்ற 32வது லீக் ஆட்டத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட உகாண்டா - நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய உகாண்டா அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் உகாண்டா அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 40 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக கென்னத் வைஸ்வா 11 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட், பவுல்ட், சாண்ட்னெர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 41 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 5.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 41 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் டெவான் கான்வே 22 ரன்கள் எடுத்தார்.

மேலும் செய்திகள்