டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் நமிபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது நெதர்லாந்து அணி
|டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணி தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.
கீலாங்,
16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் முதல் சுற்று ஆட்டத்தில் நமிபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற நமிபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் அடித்தது.
அந்த அணி தரப்பில் பிரைலின்க் 43 ரன்கள் குவித்து அவுட் ஆனார். நெர்தர்லாந்து அணி தரப்பில் லீடீ 2 விக்கெட்டும், டிம் பிரிங்கிள், காலின், பால் வான் மீக்கிரென், வான் டெர் மெர்வ் ஆகியோர் தலா 1 விக்கெ வீழ்த்தினர். இதையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடொவ்ட் ஆகியோர் களம் இறங்கினர்.
இவர்கள் முதல் விக்கெட்டுக்கு மிகச்சிறப்பான தொடக்கம் அமத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணியின் விக்ரம்ஜித் சிங் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதயடுத்து பேஸ் லீ லீடே களம் புகுந்தார். இந்நிலையில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ் ஓடொவ்ட் ரன் -அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய டாம் கூப்பர் 6 ரன்னிலும், காலின் ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் எட்வர்ட்ஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து டிம் பிரிங்லே லீடேவுடன் ஜோடி சேர்ந்தார். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை எதிர்கொண்ட லீடே முதல் பந்தில் பவுண்டரி அடித்தும், 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற செய்தார். இறுதியில் அந்த அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நெதர்லாந்து அணி தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
அந்த அணி தனது முதலாவது ஆட்டத்தில் யுஏஇ அணியை வீழ்த்தியது குற்ப்பிடத்தக்கது. நமிபியா அணி தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி தனது முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.