< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா பேட்டிங் தேர்வு
|7 Jun 2024 12:19 AM IST
டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பார்படாஸ்,
9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - நமீபியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
நமீபியா:
நிகோலாஸ் டேவின், ஜேபி கோட்ஸே, ஜான் ப்ரைலின்க், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ், மாலன் க்ரூகர், ஜேஜே ஸ்மிட், டேவிட் வைஸ், ஜேன் கிரீன், ரூபன் ட்ரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ், டாங்கேனி லுங்காமேனி.
ஸ்காட்லாந்து:
ஜார்ஜ் முன்சி, மைக்கேல் ஜோன்ஸ், பிராண்டன் மெக்முல்லன், ரிச்சி பெரிங்டன், மேத்யூ கிராஸ் , மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், கிறிஸ்டோபர் சோல், பிராட் வீல், பிராட்லி கியூரி.