< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: மைக்கேல் ஜோன்ஸ் அதிரடி - அயர்லாந்து அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஸ்காட்லாந்து அணி

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: மைக்கேல் ஜோன்ஸ் அதிரடி - அயர்லாந்து அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஸ்காட்லாந்து அணி

தினத்தந்தி
|
19 Oct 2022 5:47 AM GMT

ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்துள்ளது.

ஹோபர்ட்,

16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

முதல் சுற்று ஆட்டத்தில் இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் முன்சே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் களம் புகுந்தார். ஜோன்ஸ் மற்றும் கிராஸ் இணை சிறுது நேரம் தாக்குப்படித்து ஆடினர். இதில் கிராஸ் 28 ரன்னில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஜோன்ஸ்வுடன் கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை ஏற்றியது.

அதிரடியாக ஆடிய ஜோன்ஸ் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்க்டன் 37 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து மைக்கேல் லீஸ்க் களம் இறங்கினார். இந்நிலையில் ஜோன்ஸ் 86 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கெல் ஜோன்ஸ் 86 ரன் எடுத்தார். அயர்லாந்து அணி தரப்பில் கர்டிஸ் கேம்பர் 2 விக்கெட்டும், மார்க் அடாய்ர், ஜோசுவா லிட்டில் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்க உள்ளது.

மேலும் செய்திகள்