< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை ; குர்பாஸ் அதிரடி ஆட்டம்...ஆப்கானிஸ்தான் 159 ரன்கள் குவிப்பு

Image Courtesy: @ACBofficials

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை ; குர்பாஸ் அதிரடி ஆட்டம்...ஆப்கானிஸ்தான் 159 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
8 Jun 2024 6:45 AM IST

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார்.

கயானா ,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீசில் உள்ள கயானாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் அதிரடியாக அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அணியின் ஸ்கோர் 103 ரன்களாக உயர்ந்த போது இப்ராகிம் ஜட்ரான் 44 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அஸ்மத்துலா ஓமர்சாய் 22 ரன்னிலும், முகமது நபி 0 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய குர்பாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து ரஷித் கான் களம் புகுந்தார். இதில் ரஷித் கான் 6 ரன்னிலும் அதிரடியாக ஆடிய குர்பாஸ் 80 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.

ஆப்கானிஸ்தான் தரப்ப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பவுல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட உள்ளது.

மேலும் செய்திகள்