டி20 உலகக்கோப்பை: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே உண்டா..?
|நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நிறைய ஆட்டங்களின் இடையே மழை குறுக்கிட்டுள்ளது.
பார்படாஸ்,
கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஆட்டம் பார்படாஸ் நகரில் நடைபெற உள்ளது.
2-வது டி20 உலகக்கோப்பைக்கு குறிவைத்து இந்தியா அணி தயாராகி வருகிறது. மறுபுறம் ஐ.சி.சி. 50 ஓவர் மற்றும் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்று அதனை வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்ற முழு மூச்சுடன் போராட உள்ளது. இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
முன்னதாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் மழையால் ஆட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறைய ஆட்டங்களின் இடையே மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து ஆட்டமும் 1 மணி நேரம் மழையால் பாதிக்கபட்டது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால், நாளை மறுநாள் (30-ம் தேதி) ரிசர்வ் டே நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.