< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை; இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான் - யாருக்கெல்லாம் இடம் தெரியுமா..?
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை; இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான் - யாருக்கெல்லாம் இடம் தெரியுமா..?

தினத்தந்தி
|
24 April 2024 2:40 PM IST

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்ததும் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற இந்திய வீரர்கள் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு அந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்து பல இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் டி20 உலகக்கோப்பை தொடருக்கான, தான் தேர்வு செய்துள்ள 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளார்.

இர்பான் பதான் தேர்வு செய்துள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ( கீப்பர்), துபே, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ரவி பிஷ்னோய் அல்லது சாஹல், கில் அல்லது சாம்சன்.

ரிசர்வ் வீரர்கள்:

2 வேகப்பந்து வீச்சாளர்கள், தலா ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் (வீரர்களின் பெயர்களை அவர் தெரிவிக்கவில்லை).

மேலும் செய்திகள்