டி20 உலகக்கோப்பை; அயர்லாந்து போட்டிக்கான இந்தியாவின் ஆடும் லெவனை வெளியிட்ட இர்பான் பதான்
|அயர்லாந்து போட்டிக்கான இந்தியாவின் ஆடும் லெவனை இர்பான் பதான் தேர்வு செய்துள்ளார்.
நியூயார்க்,
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வரும் 5ம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த ஆட்டம் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஆடும் லெவனை இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தேர்வு செய்துள்ளார். அதில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் அவர் விராட் கோலியை தொடக்க ஜோடியாக தேர்வு செய்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல பார்மில் இருப்பதால் விராட் கோலியை அவர் துவக்க வீரராக தேர்ந்தெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து 3வது இடத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டையும், 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவையும், 5வது மற்றும் 6வது இடங்களில் ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யாவை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து 7 முதல் 11 இடங்களில் முறையே ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
இர்பான் பதான் தேர்வு செய்துள்ள இந்தியாவின் ஆடும் லெவன் விவரம்;
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.