< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் நாளை இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதல்
|16 Oct 2022 9:08 PM IST
இந்திய அணி நாளை நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.
பிரிஸ்மேன்,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஐசிசி நடத்தும் 'அதிகாரப்பூர்வ பயிற்சி ஆட்டம்' நாளை நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதற்கு முன் இரண்டு பலம் வாய்ந்த சர்வதேச அணிகளை பயிற்சி ஆட்டங்களில் எதிர்கொள்கிறது.
இதில் இந்திய அணி நாளை நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் களமிறங்காத விராட் கோலி, முகமது ஷமி ஆகியோருக்கு நாளை வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்த்து களமிறங்க உள்ளது. இப்போட்டி அக்டோபர் 19ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு துவங்கி நடைபெறும்.