டி20 உலகக் கோப்பை: ஹேல்ஸ்- பட்லர் அதிரடி துவக்கம்.. வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி
|சிக்சர் மழை பொழிந்த ஹேல்ஸ் 28 பந்துகளில் 5 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார்.
அடிலெய்டு,
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று அடிலெய்டு ஓவலில் நடக்கும் 2-வது அரைஇறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ற நிலையில், அந்த அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 63 ரன்களும் கோலி 50 ரன்களும் எடுத்தனர். தற்போது 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி துரத்தி வருகிறது.
இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் பவர்பிளே முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை குவித்தது. சிக்சர் மழை பொழிந்த ஹேல்ஸ் 28 பந்துகளில் 5 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார்.
தற்போது வரை இங்கிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 78 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 11 ஓவர்கள் மீதம் உள்ளது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.