டி 20 உலகக்கோப்பை; இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர் - யாருக்கெல்லாம் இடம்...?
|ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் வரும் மே மாதம் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.
இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இதையடுத்து டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அனைத்து வீரர்களும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதையடுத்து டி20 உலகக்கோப்பை தொடர் குறித்தும், இந்திய அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்தும் இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.
ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் 6 பேட்ஸ்மேன்கள், 3 விக்கெட் கீப்பர்கள், 2 ஆல் ரவுண்டர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
மேலும், யாரும் எதிரபார்க்காத வகையில் இந்திய அணியில் 3வது வேகப்பந்து வீச்சாளராக மோஷின் கானுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என கூறியுள்ளார். 3வது வேகப்பந்து வீச்சாளராக மோஷின் கான் அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என கூறியுள்ளார்.
இர்பான் பதான் தேர்வு செய்த இந்திய அணி விவரம்;
பேட்ஸ்மேன்கள்;
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங்.
விக்கெட் கீப்பர்கள்;
ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல். ஜித்தேஷ் சர்மா.
ஆல் ரவுண்டர்கள்;
ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா.
சுழற்பந்து வீச்சாளர்கள்;
குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய்.
வேகப்பந்து வீச்சாளர்கள்;
ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் (அ) மோஷின் கான்.