டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
|20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
ஆண்டிகுவா,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நமீபியாவை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஆஸ்திரேலியா 2 ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் நமீபியா அணி 2 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும். அதேவேளையில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் நமீபியாவின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விகுறியாகி விடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.